Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 07 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தற்போதைய நிலையில், வடக்கு மாகாணத்துக்கு, என்ரிஜன் பரிசோதனை தேவையற்றதொன்று என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில், தற்போதைய நிலைமையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும், அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (07) நடைபெற்ற யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஏனைய மாகாணங்களில், வடக்கு மாகாணத்தை போல பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதன் காரணமாகவே, அங்கு என்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், என்ரிஜன் பரிசோதனையில் ஒரு சில நம்பிக்கையில்லா தன்மையும் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், என்ரிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளது என காண்பிக்குமாயின், அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யும் போது அவருக்கு தொற்று இல்லை என காண்பிக்கும் எனவும் கூறினார்.
வடக்கு மாகாணத்தில் போதியளவு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணமாக, தாம் தற்போது என்ரிஜன் பரிசோதனை; பற்றி பரிசீலிக்க தேவையில்லை எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago