2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடக்கில் கைத்தொழிற்சாலைகள் நிறுவ வேண்டும்: டக்ளஸ்

Thipaan   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினையை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் கைத்தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். அதேவேளை, ஏற்கெனவே இயங்கிய தொழிற்சாலைகள் மீள செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அரசுக்கு அறிவித்துள்ளார்.

அக்கட்சி அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் தொழில் வாய்ப்பின்மை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்;குக் கொண்டு வந்துள்ள அவர், வடக்கில் நிலவும் தொழிலின்மைப் பிரச்சினையை ஓரளவு நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அம்மாவட்ட வளங்களைப் பயன்படுத்தக் கூடியதும், அம் மாவட்டத்துக்கு பொருந்தக்கூடிய ஏனையதுமான கைத்தொழிற்துறைசார் நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான முயற்சிகளுக்கு புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வதும் அவசியம். கடந்த காலத்தில் தனது அமைச்சின் கீழ் வடக்கில் பல்வேறு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள செயலாளர் நாயகம், அவை தொடரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், வடக்கில் ஏற்கெனவே செயற்பட்டு வந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, அப் பகுதியில் இயற்கை ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மூலப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு, பொதியிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஏற்கெனவே அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள குழிகளை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் பரந்தன் இரசாயணம், ஆனையிறவு உப்பளம், ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை, அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் மீள இயக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • jeyarajah Sunday, 07 February 2016 01:56 AM

    அமைச்சருக்கு அமைச்சு பதவி போனபின்தான் ஞானம் உதயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X