2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடக்கில் ஹர்த்தால்: வழமையான செயற்பாடுகள் முடக்கம் (VIDEO)

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால்  காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

காலை 8 மணி முதல் 10 மணி வரையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு பாடசாலைகளுக்கு, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், பெருமளவுக்கு மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.

வர்த்தக நிலையங்களும் அவ்வாறே செயற்படுமாறு வர்த்தக சங்கங்களால் அறிவிக்கப்பட்டு 2 மணித்தியாலங்கள் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள், ஹர்த்தாலை கடைப்பிடிப்பதுடன் மருந்தகங்கள், உணவகங்கள் என்பன திறந்துள்ளன.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் போக்குவரத்துச் சேவைகள் காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டதுடன் ரயில் சேவையானது வழமை போல இடம்பெற்று வருகின்றது.  

2015ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான சித்திரம், சங்கீதம், நடனம் ஆகியவற்றுக்கான செய்முறைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஹர்த்தாலால் செய்முறைப் பரீட்சைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், வருகை தந்த மாணவர்களுக்கு செய்முறைப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன், மிகுதி மாணவர்களும் பிறிதொரு தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X