2025 மே 19, திங்கட்கிழமை

வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் சுவரொட்டிகள்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்துக்குள் இயங்கு நிலையில் உள்ளது’ என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (19) மாலை ஒட்டப்பட்டு இருந்தன. அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளனர்.

அதேவேளை குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

அந்நிலையில் இன்று (20) அதிகாலை வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. நேற்று (19) ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையில் இன்று (20) காணப்படும் சுவரொட்டிகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.

குறித்த சுவரொட்டியில், “தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டம், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களினதும், பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.

ஆயுத போராட்டமானது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்துக்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X