Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் யாழில் மதத்தலைவர்களை நேற்றும் (05) இன்றும் (16) சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மான் கோவில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹகாஜதுரே விமல தேரர், நயினாதீவு விஹராதிபதி நமதகல பத்மகித்தி தேரர் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் ராகவனை நியமித்தமையானது ஜனாதிபதியின் மிகச்சிறந்ததொரு தீர்மானமாவே தான் பார்ப்பதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணம் நாகவிஹாரை விஹாராதிபதி விமல தேரர், ஆளுநருடன் இணைந்து வடக்கில் மதங்களுக்கிடையில் நல்லுறவினை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனைகளைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளாருடனான சந்திப்பின் போது, வடக்கு மாகாண மக்கள் தற்போது எதிர்நோக்கும் உடனடி மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ள தான் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆளுநர் முஸ்லிம் சமயத் தலைவர்களை நாளை (17) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago