Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்
வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் இன்று (06) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மேற்படி முறைப்பாடுகளைச் செய்துள்ளார்.
கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியதியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே வடமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் றொசாந் பெர்ணான்டோவுக்கு எதிராக இம்முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும், கஞ்சா கடத்தல்காரர்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருந்தார்.
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ள பொலிஸார் இவ்வாறு தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே தவராசா மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago