2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வடமாகாண வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மே 14 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்கக் கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை தவிர்ந்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .