2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடமாகாண நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் இல்லை: பிரதமர்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபையின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண சபையுடனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும் இது தொடர்பான விவரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (10) தெரிவித்துள்ளார்.

வடக்கில் மக்களைக் மீள்குடியேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வட மாகாண முதலமைச்சரை நியமிக்க, அரசாங்கம் தவறிவிட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சாள்ஸ் நிர்மலநாதன், நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.

எனினும், மீள்குடியேற்ற நோக்கத்துக்காக மூன்று அமைச்சுக்களைக் கொண்டு நியமிக்கப்பட்ட குறித்த குழு, வட மாகாண சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து பணி புரிவதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X