2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வட்டுவாகல் பாலத்தில் இனி தொழில் மேற்கொள்ளலாம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தில் தற்போது தொழில் மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளதாக சிறுகடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் தொழிலாளர்கள் தொழில்; மேற்;கொள்ளும் பகுதியாக காணப்படும் வட்டுவாகல் ஆற்றில், கடந்த காலங்களில் தொழில்களில் ஈடுபடுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன.

சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள், தொழில் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை போன்ற சிக்கல்கள் கடந்த காலத்தில் காணப்பட்டது.

எனினும், தற்போது சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இறால் பிடிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கடந்த வாரம் முதல் இப்பகுதியில் இறால் தொழில் மேற்கொள்ளக்கூடியதாகவும் இதனால், தாங்கள் இப்பகுதியில் தொழில்களில் ஈடுபட்டு வருவதுடன் இப்பகுதியில் பாரம்பரிய முறையான வீச்சுவலை மூலம் பிடிக்கப்;படும் இறாலை உடனடியாகவே 1 கிலோகிராம் இறாலை 300 ரூபாய்க்கு சந்தைப்படுத்தக் கூடியதாகவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு வேளைகளிலேயே இத்தொழிலை வழமை போன்று தாம் மேற்கொண்டு வருவதாகவும் இப்பகுதி சிறுகடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X