2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வட மாகாணசபையின் அம்பியுலன்ஸ் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை

Administrator   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க. அகரன்

வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ் சேவையொன்று நடத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின் கீழ் வடமாகாணத்தில் எப்பிரதேசத்திலும் 24 மணிநேரமும் விபத்துக்களின்போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ், 100 வைத்தியசாலைகளைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டிகள் தற்போது இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதனைச் சர்வதேசதரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாண சுகாதார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவையை மேலும் தரமுயர்த்த இலண்டன் அம்புலன்ஸ் சேவையின் உதவியை கோரியிருந்தேன்.

 இதற்கமைய அம்பியுலன் சேவையை வினைத்திறனுடைய சேவையாக மாற்றும் நோக்குடன் அம்புலன்ஸ் சாரதிகள், உதவியாளர்கள் என்பவற்களுக்கு, உயிர்காப்பு முதலுதவி சம்பந்தமான பயிற்சிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
 இதன் முதற்கட்டச் செயற்பாடாக, ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் அம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த இரண்டு ஆலோசகர்கள் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 12 வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த  ஓகஸ்ட் 29 ஆம் திகதியிலிருந்து ஒருவாரகால பயிற்சியை வழங்கினார்கள்.

 அடுத்த கட்டமாக பயிற்சியை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளினால் கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் ஒரு வாரகாலத்துக்குத், தெரிவு செய்யப்பட்ட முதற்தொகுதி அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சகல அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கி வைப்பதற்கு இதன் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கான நிதி உதவியை அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட சர்வதேச மருத்துவ சுகாதாரக்கழகம் வழங்கியிருந்தது. இச்சேவை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடன் வடமாகாணம் முழுவதும் விளம்பர பதாதைகளை அமைப்பதற்கும் மேற்படி நிறுவனம் நிதி உதவியை வழங்கியிருந்தது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X