2025 ஜூலை 19, சனிக்கிழமை

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சுவிட்ஸலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்றினால் நடத்தப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிட்ஸலாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்தன.

'அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்' எனுப் கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X