Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், வனவளத் திணைக்கள அதிகாரி எந்தவித ஆயத்தமும் இன்றி சமூகமளித்தமையால் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் திணறினார். இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது.
யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், சனிக்கிழமை(30) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒவ்வொரு பிரிவாக அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், அந்தந்த அதிகாரிகளால் அறிக்கையாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் வனவள திணைக்களத்தின் திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு குறித்த திணைக்கள அதிகாரியை வட மாகாண முதலமைச்சர் அழைத்தபோது, சபையில் அதிகாரி பிரசன்னமாகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர,; இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வனவளத்திணைக்களம் தொடர்பான பல விடயங்கள் கேள்விகளாக உள்ளன எனவும் இன்று சமூகமளிக்காமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், திடீரென சபைக்கு வருகை தந்த அதிகாரி, தன்னை வனவள திணைக்கள அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து முதலமைச்சர், அதிகாரியிடம் உங்கள் திணைக்கள செயற்திட்டம் தொடர்பில் தெரியப்படுத்துங்கள் என கூறினார். இதற்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரி திணறினார்.
'இந்த வருடம் 10 பாடசாலைகளை தெரிவு செய்துள்ளோம். மர நடுகைக்காக' என தட்டு தடுமாறி தெரிவித்தார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் '10 பாடசாலைகளை காடாக்கபோகிறீர்களா?' என்று கேள்வியெழுப்பினார். இதனால் சபையில் சிரிப்பொலி நிலவியது.
இதனை தொடர்ந்து அடுத்த கூட்டத்தில் செயற்திட்டம் தொடர்பான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago