Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 11 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னி இறுதி யுத்தத்தில் அழிந்து போயுள்ள வாகனங்களுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பல, முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருந்ததுடன், அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர். பின்னர், அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன.
இந்நிலையில், தமது வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை செய்யவேண்டுமென வாகன உரிமையாளர்கள், நீண்ட காலமாக போராடிவருகின்ற நிலையில், அதனை காப்புறுதி நிறுவனங்கள் மறுதலித்தே வருகின்றதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்கு, பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான அவசர கூட்டமொன்று, புதன்கிழமை (13) பிற்பகல் 4 மணிக்கு, நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். முகாமையாளர் சங்க இணைப்பாளர் வி.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர், அலுவலக தொலைபேசி எண் 0212227012 அல்லது அலைபேசி இலக்கம் 0773043206 ஊடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
5 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago