Freelancer / 2022 ஜூன் 23 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா - பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்திற்கு எரிபொருள் பெறுவதற்காக குறித்த இயந்திரத்தினை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓமந்தையில் இருந்து பறன்நட்டகல் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவரை அதே திசையில் பயணித்த கார் மோதியதில் பாலகிருஸ்ணன் பலியானதுடன் மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய காரின் சாரதி, சம்பவ இடத்தில் இருந்து காருடன் தப்பிச் சென்ற நிலையில், ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து காரினை கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஓமுந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .