Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
வெள்ளத்தால் வயல் அழிவடைந்தததை அதிகாரிகளுக்கு காட்டியவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று வரணிப் பகுதியில் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
வரணி, தாளையடியைச் சேர்ந்த சின்னையா குஞ்சுத்தம்பி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெய்த அடை மழையால் அழிவடைந்த வயல் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் பொருட்டு அதனை ஆய்வு செய்யும் நடவடிக்கையை மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருகின்றது.
இதனடிப்படையில்,வரணிப் பகுதியில் அழிவடைந்த வயல் நிலங்களை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற அதிகாரிகளுக்கு தனது வயல் அழிவடைந்ததை காட்டிவிட்டு, வீடு திரும்ப முற்பட்ட குறித்த வயோதிபர் வரம்பிலிருந்து தவறி வயலுக்குள் வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது,அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
17 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago