Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் பாற்பண்ணையாளர்களுக்கான வயல் விழா பண்டத்தரிப்பில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வட மாகாண கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார்.
வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, பசுக்களில் பால் சுரப்பைப் போசாக்கான உணவின் மூலம் அதிகரிக்கும் நோக்கில் சீனி இறுங்குப் பயிரைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது.
அதிக அளவு சீனியைக் கொண்ட சீனி இறுங்குப்பயிர் முழுவதுமாகவே கால்நடைத்தீவனமாகப் பயன்படவல்லது. இதனை இயந்திரங்களின் உதவியோடு நறுக்கி சீனி சேர்த்து நொதிக்கவைத்து 'சைலேஜ்' எனப்படும் பதப்படுத்திய உணவாக நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும்.
சீனி இறுங்கில் இருந்து கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறை, கால்நடைத் தீவனமாக அசோலா தாவரத்தைப் பயன்படுத்தல் போன்ற செயன்முறை விளக்கங்கள் வயல் விழாவின்போது பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டதோடு, யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் பால் சேகரிக்கும் கொள்கலன்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் லிஸ் டேவ்னி ஈஸ்ரன், டேவிட் டையர், டொக்டர்.பா.சிவயோகநாதன், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர்.சி.வசீகரன் ஆகியோரும் அதிக எண்ணிக்கையான பண்ணையாளர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வயல் விழாவின்போது யாழ்கோ, நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் மற்றும் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தங்கள் காட்சிக்கூடங்களை அமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago