2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வயாவிளான் மத்திக்கு நீர் குழாய்கள் அன்பளிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வயாவிளான் மத்திய கல்லூரிக்கு, பழைய மாணவர் ஒருவரால் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீர்க்குழாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் முதல்வர் வீ.ரி.ஜெயந்தன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பழைய மாணவர் இந்த உதவியை வழங்கியுள்ளார்.

இதன்மூலம் கல்லூரியின் வகுப்பறை கட்டடம் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு நீரை  வழங்க முடியும். மேலும் பயன்தரக்கூடிய மரங்களுக்கும் நீர் பாய்ச்சுவதன் ஊடாக பாடசாலை வளாகத்தினை குளிர்மையாக வைத்திருக்க முடியும் என அதிபர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X