2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வயாவிளானில் ஆரம்ப சுகாதார நிலையம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கிராமத்து 1 மில்லியன் ரூபாய் வேலைத்திட்டத்தில், வயாவிளான் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் அலுவலகம் என்பன அமைக்கப்பட்டு வருகின்றன.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்ட இந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே அமைந்துள்ள வயாவிளான் மேற்கு சிவசக்தி முன்பள்ளியுடன் இணைத்து இந்தக் கட்டடம் அமைக்கப்படுகின்றது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள வயாவிளான் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இன்மையால் கர்ப்பிணிப் பெண், சிறுவர்கள் நீண்ட தூரம் சென்று மருத்துவச் சிகிச்சையைப் பெறவேண்டியிருந்துது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தருவதாக பிரதேச செயலர் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய முன்பள்ளியுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X