Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம், வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில், சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்மிரருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை(01) தெரிவித்தார்.
வரணி படைமுகாமில் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணிகளை விடுவித்தல் எனும் செயற்பாட்டில், தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்திருந்த வரணி படைமுகாமை, இராணுவத்தினர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் விட்டு வெளியேறியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த முகாம், ஏ-9 வீதிக்கு அருகில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முகாம் வரணியில் அமைக்கப்பட்டிருந்த போது, விசாரணைக்கு என அழைத்துவரப்பட்ட மக்கள், பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இராணுவத்தினரின் சித்திரவதைகளை வெளிக்கொணரும் வகையில், குறித்த முகாம் விடுவிக்கப்பட்டபோது, அங்கிருந்த சித்திரவதைக் கூடம் ஒண்றைக் காணமுடிந்ததாகவும், அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு சென்றபோது, தாம் பிடித்த புகைப்படங்கள் ஆதாரமாக காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனமெடுத்து, விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago