2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தக முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் நடுத்தர, சிறிய பொருளாதார ரீதியாக நலிவடைந்து காணப்படும் கைத்தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை ஊக்குவிப்பதுக்காக அரசாங்கம் பல்வேறு மக்கள் நல செயற்றிட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பிரதி அமைச்சர் இத்திக பத்திரண தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் வடமாகாண கைத்தொழில் வர்த்தக அதிகார சபை ஆகியவற்றின் எற்பாட்டில் வடமாகாணத்தில் கைத்தொழில் வர்த்தக தொழில் முயற்சியாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனைகள் கண்டறியும் நோக்கிலான சந்திப்பு இன்று (13) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் இத்திக பத்திரண கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கைத்தொழில், வர்த்தக துறைசார்ந்த கட்டமைப்பினை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, 86 வீதமான வளர்ச்சி வீதம் காணப்படுகின்றது. எனவே இவ்வாறான வளர்ச்சி வீதம் அதிகாரிக்கப்பட வேண்டும்.

எனவே அவ்வாறான ஊக்குவிப்பு என்பது ஏனைய மாகாணங்களில் இருந்தும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  முன்மொழிவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முழு அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுக்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறான வலுவான கட்டமைப்பிற்காக புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.

வடமாகாணத்தில் ஏனைய வளங்களை விட தனிப்பட்ட ஒரு விடயத்துக்கான ஆரம்பக் கைத்தொழிற்சாலை இன்னும் பல இடர்நிலையில் காணப்படுகின்ற நிலை வேதனை அளிக்கின்றது. அவற்றினையும் மீண்டும் மக்களிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.

இச்சந்திப்பில் முயற்சியாளர்களின் அபிவிருத்தி பங்கு பற்றியும், புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் முதலீட்டாளர்களின் பங்குகள், அரசாங்கத்தின் ஊடாக தொழிற்சாலைகள் விஸ்த்தரிப்பான செயற்பாடுகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம், மற்றும்  வடமாகாண கைத்தொழில் வர்த்தக அதிகார சபை பணிப்பாளர் எ.பாலசுப்பிரமணியம், அமைச்சின் உயர் அதிகாரிகள் தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X