Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
இலங்கை மாதகல் கடற்பரப்பினுள் எல்லை மீறி வந்து வலை தேடிய குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால், கைதான இந்திய மீனவர்கள் மூவரையும், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், நேற்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டதாக இளவாலை பொலிஸார், இன்று புதன்கிழமை (20) தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர் தல்காவினை சேர்ந்த கருப்பையா ராமகிருஸ்ணன் (வயது 62), வேதநாயகம் சிவன் (வயது 28), மற்றும் அந்தோனி சேவியர் (வயது 28) ஆகிய மூவருமே இவ்வாறு கைதானவர்கள் என பொலிஸார் கூறினர்.
இலங்கை கடற்பரப்பில் திங்கட்கிழமை (18) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, இரண்டு விசைப்படகில் வந்த இலங்கை மீனவர்கள் தமது வலையினை அறுத்து சென்றனர். அதனை தேடி வந்த போதே கடற்படையினர் தம்மை கைதுசெய்ததாக அவர்கள் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Oct 2025
01 Oct 2025