2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வளலாய் காணியில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட வளலாய் மேற்குப் பகுதியில் உள்ள தோட்டக்காணியில் இருந்து, ஒரு தொகுதி வெடி மருந்துகள் நேற்றுத் திங்கட்கிழமை (14) காலை மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

டெமோ 4, பராலைட் 6, கைக்குண்டு 8, மெகசின் 20, துப்பாக்கி ரவைகள், இரண்டு மிதிவெடி  என்பன மீட்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை (14) காலை தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த காணி உரிமையாளர், நிலத்தில் புதையுண்டு நிலையில் இருந்த பெட்டியொன்றைக் கண்டுள்ளார். அதனைத் திறந்து பார்த்த போது, அதற்குள் வெடி பொருட்கள் இருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு  அவர் அறிவித்துள்ளார்.

சம்ப இடத்துக்கு வந்தப் பொலிஸார்,  வெடிப்பொருட்களை கைப்பற்றியதுடன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, வெடி பொருட்களை செயழிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X