2025 ஜூலை 19, சனிக்கிழமை

வழக்குகளுக்கு சட்டத்தரணிகளை ஏற்படுத்துமாறு வலியுறுத்தல்

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணிகள் இன்றி வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டாம் என மாவட்ட நீதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து வழக்குகள் உட்பட சிறு வழக்குகளுக்கும் சட்டத்தரணிகளை ஏற்படுத்துமாறு கூறி வழக்கு விசாரணைகளுக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் மீள வழக்குக்கு வரும் போது சட்டத்தரணியுடன் வருமாறு பணிக்கப்படுகிறது.

இப் புதிய நடைமுறையினால் நீதிமன்றத்துக்கு வருபவர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் அன்றாடம் கூலி வேலை செய்யும் பொதுமக்கள் நீதிமன்ற விசாரணை என்று வரும்போது அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளது.

கடந்த வருடங்களில் இல்லாத புதிய நடைமுறை ஒன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடத்தே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபர் ஒருவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் போது, எந்தவொரு சட்டத்தரணியும் இன்றி நீதிமன்றில் குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X