Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 29 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘வழமைக்கு மாறாக, எல்லோருக்கும் அல்லாமல், குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வழங்கப்படும் ஒதுக்கீடு, அரசியல் இலஞ்சம்’ என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘எமது பிரதேசத்துக்குப் பொருத்தம் இல்லாத பொருத்து வீட்டுத்திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று, நாங்கள் கடுமையாக எதிர்த்த போது, மத்திய அமைச்சர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆலயங்களைப் புனரமைப்பதற்கான நிதியை உங்களுடைய பரிந்துரையின் பேரில் ஒதுக்கீடு செய்கிறேன், பட்டியலைத் தாருங்கள் என்று கேட்டார். பிரத்தியேகமாக எனது பரிந்துரையில் மேற்கொள்ளப்படும் ஒதுக்கீடு எனக்குப் போடப்படும் வாய்ப்பூட்டு என்பதால், நான் அதனைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. மத்திய அரசாங்கம் அபிவிருத்திக்குத் தருகின்ற நிதியாக இருந்தாலும் வழமைக்கு மாறாக, எல்லோருக்கும் அல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வழங்கப்படும் ஒதுக்கீடாக அது இருந்தால், அது, அந்நிதியைப் பெற்றுக்கொள்வோரை வாய்மூடி மௌனிகளாக்கும் அரசியல் இலஞ்சம்தான்’ என தெரிவித்தார்.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago