2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வழிப்பறி செய்தவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம், மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வழிப்பறிகளில் ஈடுபட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

உடுவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண் ஒருவரின் 2 பவுண் பெறுமதியான தங்கச்சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பில் அறுத்துச் சென்றவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு இலக்கத்தை பறிகொடுத்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மோட்டார் சைக்கிள் உரிமையாளரான சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்தனர்.

விசாரணைகளின் போது, இவர் மேலும் பல வழிப்பறிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X