Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வழித்தட அனுமதியை மீறிய பஸ்ஸின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், புதன்கிழமை (14) தீர்ப்பளித்தார்.
காரைநகர் - யாழ்ப்பாணம் - கொடிகாமம் ஊடாக கொழும்புக்கு செல்வதற்கு வழித்தட அனுமதியினை பெற்ற தனியார் பஸ்ஸின் சாரதி, அனுமதிப்பத்திரத்தை மீறி பருத்தித்துறை சென்று, அங்கிருந்த பயணிகளையும் ஏற்றியுள்ளார்.
வரணி பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கொடிகாமம் பொலிஸார், குறித்த பஸ்ஸை மறித்து சோதனையிட்டனர். அப்பொழுது அவர் அனுமதியை மீறிச் செயற்பட்டமை தெரியவந்தது.
பஸ்ஸில் பயணித்த பயணிகளை வேறு பஸ் ஒன்றில் ஏற்றி அனுப்பிய பொலிஸார், பஸ்ஸை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். பஸ் உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்த போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago