2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியா குளத்தினுள் களியாட்ட நிகழ்வு; நிறுத்தக் கோரிக்கை

Princiya Dixci   / 2020 நவம்பர் 22 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா குளத்தினுள் மண் இடப்பட்டு, களியாட்ட நிகழ்வு நடத்தப்படுவதை ஆட்சேபித்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், வவுனியா குளத்தின் கமக்காரர் அமைப்பினரால் மாவட்டச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பட்டுள்ளது.

வவுனியா குள கமக்காரர் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வவுனியா குளத்தில் மண் போட்டு நிரப்பி, களியாட்ட நிகழ்வுகள் நடத்துவதை எமது விவசாயிகள் எவரும் ஏற்கவில்லை. மேற்படி விடயத்துக்காக வவுனியா குளத்தில் போடப்பட்டுள்ள மண்ணை முற்றாக அகற்றுதல் வேண்டும்.

“வவுனியா குளத்தில் நடத்தப்படும் களியாட்ட நிகழ்வுகளை உடனடியாக நிறுத்தி, வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், தங்கள் அதிகார எல்லைக்குள் மேற்படி விடயங்களை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மறுக்கும் பட்சத்தில், தாங்களே நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து இவ்விடத்தில் தீர்வை பெற்றுத்தரவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், தாங்களும் இவ்விடத்தில் நடவடிக்கைகளை எடுக்கத் தாமதிக்கும் பட்சத்தில், வேறுவழியின்றி, விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X