Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2018 ஜனவரி 29 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அச்செழு பகுதியில் இரவு நேரம் வாளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்செழு பகுதியில் நேற்று (28) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் வாள்களுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளனர்.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அவர்களை பிடிக்க முற்பட்டபோது, மூவர் தப்பியோடிய நிலையில் இருவர் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 3 அடி நீளமான வாள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் அச்செழு மற்றும் சுன்னாகம் பகுதியைச்சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
19 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago