2025 மே 05, திங்கட்கிழமை

விசமிகளால் வீதி திட்ட பதாதை சேதம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரால் திரை நீக்கம் செய்யப்பட்ட வீதித் திட்ட பதாதை விசமிகளால் கிழித்தெறியப்பட்டுள்ளது.

மூன்று கிலோமீற்றர் நீளமான வவுனியா கற்பகபரம் பிரதான வீதி, 1.7 கிலோமீற்றர் நீளமான பாலாமைக்கல் வீதி, ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வேலைத்திட்டத்தின் கீழ், காப்பெட் இடும் பணிக்காக 126.69 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 

குறித்த புனரமைக்கான ஆரம்ப பணிகளை, கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல்லன்சா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோர் இம்மாதம் ஆரம்பித்து வைத்திருந்தனர்.

அத்துடன், பிரதமர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் கூடிய திட்ட பதாதைகளையும் அவர்கள் திறந்து வைத்திருந்தனர்.

இவ்வாறு திரைநீக்கம் செய்யப்பட்ட குறித்த திட்ட பதாதைகளில் காட்சி அளிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களின் படங்களே  விசமிகளால் கிழித்தெறியப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X