Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, இன்று (15) காலை 11 மணிக்கு, விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்றுச் சமூகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தை விட்டு வௌியே பயணமொன்றை மேற்கொண்டிருந்நதன் காரணமாகவே, அவர், விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நேற்று (14), மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், சட்டவிரோத கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சம்பவ இடத்துக்கு வந்த சிலர், தாங்கள் ஒரு நிறுவமென்றும் தாங்கள் சட்டவிரோதமாக கேபிள் கம்பங்களை அமைக்கவில்லையென்றும் தெரிவித்து, மேயருடன் முரண்பட்டுள்ளனர்.
அத்துடன், முரண்பட்டவர்கள், இது தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில், மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago