2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

விடுவிக்கப்பட்டது மயிலிட்டி துறைமுகம்

Editorial   / 2017 ஜூலை 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில், 27 ஆண்டுகளாக இருந்த மயிலிட்டி துறைமுகம், அதனை அண்டிய 54 ஏக்கர் காணி, இன்று (03) காலை விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பாதுகாப்புக் கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராய்ச்சி, யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகனிடம், காணி விடுவிப்புக்கான பத்திரங்களை கையளித்தார்.

துறைமுகம் விடுவிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி மீனவர்கள், மயிலிட்டி துறைமுகத்திலிருந்து தமது தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட மேலதிக காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவஸ்ரீ, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X