2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பில் அமெரிக்க தூதர் ஆராய்வு

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (06) புதன்கிழமை வருகை தந்துள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

அதன்போது, இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டார்.

குறிப்பாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு உள்ள சவால்கள் மற்றும் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X