2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 மார்ச் 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் எதிரில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மதியம் இடம் பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மதியம் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேளை, பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X