2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Kogilavani   / 2017 ஜூன் 13 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 4 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியின் மூலமாகவே, மேற்படி நால்வரும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரு இளைஞர்கள்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

4 இளைஞர்களும் 2 மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். எனினும் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதி ஏற்பட்ட விபத்தா? அல்லது வேறு வாகனங்கள் இவர்களை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளதா, என்பது தொடர்பில் தெரியவில்லை என சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கபிலன் (வயது 22), சஞ்சயன் (வயது 25), கஜேந்திரன் (வயது 25) ஆகிய மூவரும் மற்றைய இளைஞனின் பெயர் தெரியவரவில்லை எனவும் குறித்த இளைஞர்கள் எப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் இதுவரை தெரியவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X