2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விபத்தில் பாடசாலை மாணவன் மரணம்

Freelancer   / 2024 மார்ச் 01 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, ஐயாக்கடை A9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்   மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விளையாட்டுப் பயிற்சிகளை நிறைவு செய்து துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் 19 வயதான மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பஸ், அதிக வேகத்துடன் பயணித்தமையே விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X