2025 மே 05, திங்கட்கிழமை

விமானத்தில் சென்று படகில் வந்த வர்த்தகர் கைது

Niroshini   / 2021 மே 12 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணித்த வர்த்தகர் ஒருவர், கடல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த நிலையில், நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுழைவு விசா மூலம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற வர்த்தகர் ஒருவர், கடல் மார்க்கமாக படகு உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்தி, திங்கட்கிழமை (10) இரகசியமாக நாட்டை வந்தடைந்தார்.

மன்னார் - பேசாலை வழியாக வருகை தந்து,  மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸில் பயணித்துள்ளார்.

இதனை அறிந்த கடற்படையினர், நேற்று  (11) பொதுச் சுகாதார உத்தியோகத்தருடன் இணைந்து,  குறித்த வர்த்தகரைக் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் சங்காணை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் தற்போது, காரைநகரில் கடற்படையினரின் பராமரிப்பில் உள்ள கொரோனா தடுப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனவும், கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X