2025 மே 19, திங்கட்கிழமை

விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் நேற்று (02) கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்று (02) வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார்.

அதனை அடுத்து வாள் வெட்டுக்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து வாளினால் வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே வெட்டியதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேக நபர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X