2025 மே 01, வியாழக்கிழமை

வீட்டில் தீ விபத்து; மாணவி மரணம்

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (02) மாலை இடம்பெற்ற தீ விபத்தில், தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் சுதன் சதுர்சியா  (வயது 17) எனும் மாணவி உயிரிழந்துள்ளார்.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டமையை அறிந்த அயலவர்கள், பரவிய தீயைக் கட்டுப்படுத்தி, மாணவியை அங்கிருந்து மீட்டு, சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .