Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வீதிகளில் இரவு வேளைகளில் கழிவுகளை வீசிய 21 பேரை பிரதேச செயலக ஊழியர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வீதிகளில் இரவு வேளைகளில் குப்பைகள், இறைச்சி கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்களை வீசி வருவதால் வீதியால் செல்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
அது தொடர்பில் முறைபாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று (27) பிரதேச செயலக ஊழியர்கள் இரவு விசேட வீதி சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்போது வாகனங்களில் கழிவுகளை எடுத்து வந்து வீதியில் வீசி சென்ற 21 பேர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். மடக்கி பிடிக்கப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஊழியர்கள் கையளித்தனர்.
அதனை அடுத்து 21 பேருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதுக்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
3 hours ago