2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வெளிநாடு செல்ல முயன்ற 16 பேருக்குக் கொரோனா

Freelancer   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டவர்களில் 20 பேருக்குக்  கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 16 பேர் வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்காகத் தம்மைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்களாவர்.

அவற்றின் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 20 பேரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 03 பேரும், முழங்காவில் இலங்கை விமானப்படை முகாமில் ஒருவரும் என 28 தொற்றாளர்கள் வடக்கில் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .