Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
சரசாலை குருவிகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளை விசமிகள் சிலர் வேட்டையாடி வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சரசாலை குருவிகள் சரணாலயப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை நாடி, காலை, மாலை வேளைகளில் பெருமளவான பருவகால வெளிநாட்டுப் பறவைகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பறவைகளை சில விசமிகள் வேட்டையாடி வருகின்றனர்.
பறவைகள் மீது வலைகளை வீசி வேட்டையாடி வருவதனால் , தற்போது அப்பகுதிக்கு பறவைகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ஒன்றுகூடும் விசமிகள், இவ்வாறு பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். சில தடவைகள் ஊரவர்கள் வேட்டையாட முற்பட்ட விசமிகளை மடக்கிப் பிடித்து எச்சரித்து விடுவித்த போதிலும் அவர்கள் வேட்டையை நிறுத்தாது சன நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, இத்தகைய சட்டவிரோத வேட்டையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago