2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விகாரை உண்டியல் பணத்தை திருடிய நால்வர் தடுத்து வைப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

மாதகல் பகுதியில் அமைந்துள்ள ஜம்புகோளப்பட்டிண விகாரையின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் கைதான நால்வரில் 3 சிறுவர்களை அரச சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையிலும், 19 வயது இளைஞனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தடுத்து வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார்.

மேற்படி விகாரையின் உண்டிலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவ்களைக் கடற்படையினர் பிடித்து, இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன்போது, அவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 235 ரூபாய் பணமும் மீட்கப்பட்டது.

இரண்டு சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் மேலும் ஒரு சிறுவன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X