2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விசர்நாய் கடிக்கு உள்ளானவர் 5 மாதங்களின் பின் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சை பெறத்தவறிய முதியவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இச் சம்பவத்தில், அரியாலை யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த சின்னத்துரை சிறிஅன்பழகன் (வயது 64) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மேற்படி முதியவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் வீதியால் நடந்து வந்துள்ளார்.

இதன்போது, இவரை தெருவில் அலைந்து திரிந்த விசர் நாய் கடித்துள்ளது. எனினும், குறித்த நபர் அதனைப் பொருட்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை.

இந் நிலையில், நேற்றுக் காலை திடீர் நெஞ்சுவலியினால் அவதிப்பட்ட முதியவரை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். விசர்நாய் கடித்ததினால் ஏற்பட்ட நோய்தொற்றே மேற்படி முதியவர் உயிரிழக்கக் காரணம் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X