2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெசாக் தினத்தில் தமிழில் பிரித் ஓதுவோம்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“வடமாகாணத்தில் கொண்டாடப்படவுள்ள வெசாக் தினத்தில், தமிழில் பிரித் ஓதவுள்ளோம்” என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வெசாக் கொண்டாட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“வெசாக் தினத்தில் நாகவிகாரை, துரையப்பா விளையாட்டு மைதானம், கிளிநொச்சி, பூநகரி ஆகிய இடங்களில் வெசாக் கூடுகள் அமைக்கவுள்ளோம்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வெசாக் தினத்தை கொண்டாடவுள்ளோம். வடக்கில் அமைக்கப்படும் வெசாக் கூடுகளைப் பார்வையிட தெற்கிலிருந்து பொதுமக்களை அழைத்து வரவுள்ளோம்.

வெசாக் கூடுகளின் அருகில் தானங்கள் வழங்கல் மற்றும் வாழ்வாதார உதவிகளாக பசுமாடுகள் வழங்கல் என்பவற்றையும் மேற்கொள்ளவுள்ளோம்.

இராணுவத்தினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று வெசாக்கூடுகளை பார்வையிட முடியாத காரணத்தால் அவர்களைக் கொண்டு இங்கு வெசாக் கூடுகளை அமைக்கின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X