2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வீடமைப்புத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் அவசியம்

Princiya Dixci   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், தேசிய வீடமைப்பு அதிகார சபையானது கடன் அடிப்படையில் வீட்டுத் திட்டங்களை எமது மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களால் அவ் வீடுகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் முதற்கட்ட கடன்களைப் பெற்று பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எமது மக்கள் தங்களுக்கான வீடுகளை அமைக்க ஆரம்பித்துள்ள போதிலும், அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார வசதியின்றி அவலப்படும் நிலையே காணப்படுகின்றது. 

இதனால் பாதி முடிக்கப்பட்ட வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காடுகள் அடர்ந்து காணப்படுவதுடன், எமது மக்கள் குடியேற இயலாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, இம்மக்களுக்கு பயனுள்ள வகையில் விசேட மாற்றுத் திட்டமொன்றை தேசிய வீடமைப்பு அதிகார சபை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X