2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வீடு புகுந்து தாக்கிய இருவர் கைது

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையிலுள்ள வீடொன்றுக்குள் கடந்த 2ஆம் திகதி புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியதுடன் பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருநகர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X