2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம், அரியாலை வசந்தபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை, நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குருநகர், ஐந்து மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த நோபிள் றொபின்சன் (வயது 37) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது காணியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மண்வெட்டி கொத்துப்பட்டதில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது.

புதைக்கப்பட்டிருந்த மிதிவெடியே வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X