2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பஸ் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பஸ் சாரதிகளால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. எனவே, இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளைக் கேட்டுக்கொள்வதுடன், அவ்வாறு விதிகளை மீறி செலுத்தும் சாரதி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதுடன் வாகன அனுமதிப்பத்திரமும் எதிர்வரும் காலங்களில் இரத்து செய்யப்படுமெனத் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பஸ்; சாரதிகள் உரிய வீதி போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தமது பயணங்களை மேற்கொள்ளவும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X