2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வைத்தியசாலை பணியாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும்

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் எட்டமுடியும் என  சுகாதார பிரதி அமைச்சர் பைசில் காசிம் தெரிவித்தார்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை (07) விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம், சுகாதார அமைச்சிலிருந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் 60 அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளோம்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக நாம் நேரடியாக விஜயம் செய்துள்ளோம்.

இதன்போது, பிரச்சினைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அதற்குரிய தீர்வுகள் கொடுக்கமுடியுமா? என்று ஆராயவும், இல்லாவிடின் கொழும்பு சென்று பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுமே வருகை தந்துள்ளோம்.

நாம் இதற்கு முன்பு குருநாகல் வைத்தியசாலையில் இந்த நடமாடும் சேவையினை நடத்தியதன் விளைவாக அங்குள்ள 80 சதவீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

இன்று இங்கு வைத்தியசாலை ஊழியர்கள், அதிகாரிகள் தமது பல பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர். இயன்றளவுக்கு இவர்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கிறோம்.

வைத்தியசாலையில் உள்ள நிபுணர்களுடன் பேசவுள்ளளோம். அவர்களுடன் பேசி இப்பிரச்சினைக்குரிய தீர்வுதிட்டத்தை முன்னெடுக்கமுடியும் என நம்புகிறோம்.

தற்போது நவீனமயமான பரீட்சார்த்தமான நிலையமாக வைத்தியசாலை காணப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X