2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விபத்தை ஏற்படுத்த முயற்சித்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி சாவகச்சேரி நீதவான் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனத்துக்கு விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்த சாரதி ஒருவருக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (02) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரி பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி முன்னே எரிபொருள் ஏற்றி சென்ற பௌசரை முந்தி எதிரே வந்து கொண்டிருந்த நீதிவானின் உத்தியோகபூர்வ வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக முயற்சி செய்துள்ளார்.

இதனை அவதானித்த நீதவான் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

தகவலின் அடிப்படையில் குறித்த சாரதி கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாரதியை புதன்கிழமை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X